உள்ளூர் செய்திகள்

துாய்மை காப்போம்

* இளமையான மூங்கிலை எளிதில் வளைக்க முடியும். அதுபோல, இளம்வயதிலேயே மனதை கடவுள் பக்கம் திருப்பி விடுங்கள்.* மனித மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. உலகவிஷயத்தில் ஈடுபட்டு சிதறி நாலாபுறமும் ஓடினால் ஒன்று சேர்ப்பது எளிதல்ல.* பேசுவது யாருக்கும் எளிமையானது. ஆனால், அதைப் பின்பற்றி நடப்பது மிகவும் கடினமானது.* மனமே கடவுள் குடியிருக்கும் வீடு. எப்போதும் அதன் துாய்மை காப்பது அவசியம்.* தன்னைத் தானே ஒருவன் திறமைசாலி என்று கருதிக் கொள்வது மூடத்தனமான செயல்.ராமகிருஷ்ணர்