அன்புக்கு நிகரில்லை
UPDATED : நவ 21, 2016 | ADDED : நவ 21, 2016
* கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்யும் துாய அன்புக்கு நிகரானது எதுவுமில்லை.* ஆணவம் மனிதனை நிழல் போல பற்றித் தொடர்கிறது. அதை அகற்ற விடாமுயற்சி அவசியம்.* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல, ஞானிகள் மீண்டும் பூமியில் பிறப்பதில்லை.* கண்கள் கண்ணாடி போன்றவை. அவை மனதில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.- ராமகிருஷ்ணர்