அனுபவம் தரும் பாடம்
* வாழ்க்கையில் ஏற்படும் பெரிய விஷயங்களை பெரிதுபடுத்தாமல், இதுவும் சிறிய விஷயம் தான் என யார் நினைக்கிறாரோ, அப்போது அவரது உள்ளத்தில் ஆன்மிகம் தலையெடுத்து விட்டதாக பொருள்.* தெளிந்த அறிவுடன் தேர்வு செய்யும் செயலையே செய்ய வேண்டும்.* நீங்கள், வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும் பாடமாக எடுத்துக் கொள்பவராக இருந்தால் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள் என பொருள்.* கல்வியறிவின்படி வாழ்ந்தால் அதிகதொலைவிலும், இயல்புப்படி வாழ்ந்தால் ஆன்மிகம் அருகில் இருப்பதுடன் பெரும்பாலான மக்களுக்கு தானாகவே பக்தி ஏற்படுகிறது.* வாழ்க்கையில் அனைத்து வேலைகளையும் முடித்த பின்பே, ஆன்மிகத்தில் நுழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள்.* குழந்தைகளுக்கு எழுதப்படிக்க மட்டும் கற்றுக்கொடுக்காமல், அவர்களுக்கு தங்கள் மூளையை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.* ஆன்மிகம் என்பது செயல்களைக் குறிக்காது. முட்டாள்தனமான செய்கைகளை நிறுத்தும் போது தான் அது ஆன்மிகமாகிறது.-ஜக்கிவாசுதேவ்