உள்ளூர் செய்திகள்

வாழ்க்கை அழகானதாக இருக்கும்

* தீரா ஆர்வம் ஒன்றன்மேல் மட்டுமே கவனம் செலுத்தும், அதனால் ஏதோ ஒரு தருணத்தில் எரிந்து தீர்ந்துவிடும். கருணை அனைத்தையுமே அரவணைத்துக் கொள்ளும், வற்றா எரிபொருள் கொண்ட கருணை எறிந்து மடியாது.* வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் விட்டால், வாழ்க்கை அழகானதாக இருக்கும், அதனை பிடித்து வைத்தால் வேதனையில் முடியும். இதுவே உயிரின் சுபாவம்.* ஒரு மனிதன் நலமாய் வாழ பெரும் முயற்சி எதுவும் தேவையில்லை, ஆனால் பிறரைப்போல் வாழ, அதீத முயற்சி தேவை.* நான் வளத்திற்கு எதிரானவன் அல்ல, நான் சௌகரியத்திற்கு எதிரானவனும் அல்ல, ஆனால் நான் தேக்க நிலைக்கு எதிரானவன். ஏனென்றால், நீங்கள் தேக்க நிலையில் இருக்கும்போது பாதி உயிராகவே வாழ்கிறீர்கள்.* இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் புத்திசாலித்தனம், குறுகிய எல்லைக்குள் இருப்பவற்றை மதிப்பீடு செய்வதற்கல்ல, எல்லையில்லாதை நாடி, அதனுடன் தொடர்பு கொள்வதற்காக.