உள்ளூர் செய்திகள்

முகமூடியைத் தூக்கி எறியுங்கள்

* உங்கள் துக்கத்துக்கு காரணம் உங்கள் கடந்த கால செயல்கள் அல்ல, அந்த செயல்களிலிருந்து அறிந்தவற்றை இன்று நீங்கள் பயன்படுத்தும் விதம்தான் உங்கள் துக்கத்துக்குக் காரணம்.* கார், வீடு, ஆடை, ஆபரணங்கள் உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிப்பதில்லை; நீங்கள் எவ்வளவு அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறீர்கள் என்பதே உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கிறது.* மனஅழுத்தம், கோபம், பயம் என்று எவ்வித எதிர்மறை உணர்வுகளை நீங்கள் உணர்ந்தாலும் அதற்கு ஒரே ஒரு அடிப்படைக் காரணம், உங்கள் உள்தன்மையைப் பற்றிய விழிப்புணர்வில்லாமல் நீங்கள் இருப்பதுதான்.* சமூகத்தில் பிழைப்பு நடத்துவதற்காக நீங்கள் உருவாக்கிக் கொண்ட முகமூடியே ஆளுமைத்தன்மை. அந்த முகமூடி உங்களுடனேயே ஒட்டிக்கொண்டது பெரும் பிரச்சனை.சத்குரு ஜக்கிவாசுதேவ்