உள்ளூர் செய்திகள்

மனதில் உறுதி வேண்டும்

* பிறருக்காகச் செய்யும் சிறுமுயற்சி கூட, நமக்குள் இருக்கும் சக்தியை எழுப்பி விடும். பிறருக்காக சிறு நன்மையை மனதில் நினைத்தாலும், சிங்கத்தின் பலம் நமக்கு உண்டாகும்.* செல்வமும், புகழ்வாழ்வும், உலக போகமும் சில நாள்களுக்கே. எனவே ஆசையில் மூழ்கிக் கிடக்க வேண்டாம். கடமையைச் செய்து களத்தில் உயிரை விடுவது தான் நன்மை.* ஒருவரிடமும் பொறாமைப்படக் கூடாது. நன்மை செய்ய விரும்புவோருக்கு கை கொடுக்கத் தயாராகுங்கள். உலக உயிர்களை நேசித்து சகோதர உணர்வுடன் வாழுங்கள்.* ஏழைகள், பலமற்றவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோரிடம் சிவனைக் காண்பவனே உண்மையில் கடவுளை வழிபடும் பேறு பெற்றவன். கோயிலில் சிவனைக் கண்டு வணங்குபவனை விட, சேவை செய்பவனையே சிவன் நேசிக்கிறார்.* உள்ளத்தில் உறுதி, பேச்சில் இனிமை, இதழில் புன்னகையோடு எப்போதும் இருங்கள். மனத்தளர்வு தரும் விஷயங்களில் மனதைச் செலுத்துவது கூடாது. - விவேகானந்தர்