அன்பை தானம் செய்யுங்கள்
UPDATED : ஜன 12, 2017 | ADDED : ஜன 12, 2017
* தானம் செய்வதாக இருந்தால் அன்பைத் தானம் செய்யுங்கள். அறிவு, ஞானம், யோகம், தியானம் ஆகியவைஎல்லாம் அன்பிற்கு ஈடாகாது.* யாருடைய நம்பிக்கையையும் குலைக்க வேண்டாம். முடியுமானால் நம்பிக்கையையும் விட மேலான ஒன்றைப் பிறருக்குக் கொடுக்க முயலுங்கள்.* முடிந்த அளவு பிறருக்கு கொடுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி மீண்டும் உங்களை வந்தடையும்.* தியாகம் செய்வதில் விருப்பம் கொள்ளுங்கள்.- விவேகானந்தர்