வாழ்வை அர்ப்பணிப்போம்
UPDATED : ஆக 23, 2015 | ADDED : ஆக 23, 2015
* உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஒவ்வொரு கணமும் செயல்படுங்கள். * இளமையில் இருந்தே நல்ல பண்பாளர் களுடன் பழகுங்கள். அதுவே நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவும். * தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள். மற்றவர்கள் உயிர் இருந்தும் இல்லாதவர்களே. * உழைப்பில் நம்பிக்கை வைத்தவனுக்கு அதிகாரமும், பதவியும் தானாகவே தேடி வரும். - விவேகானந்தர்