சாதிக்க முயல்வோம்
UPDATED : ஏப் 20, 2016 | ADDED : ஏப் 20, 2016
* மனிதனாகப் பிறந்த நாம் வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம்.* வாழ்வில் வளர்ச்சி பெற அக்கறையுடன் செயல்படுவது அவசியம். அக்கறைஇன்மை மனிதனை பலவீனப்படுத்தும்.* ஆன்மிக வாழ்க்கை என்பது சோறு போன்றது. செல்வம், புகழ் போன்றவை கறி, கூட்டு போலாகும்.* பரந்த நோக்கத்துடன் விரிவதே வாழ்க்கை. சுயநலமாக இருப்பது மரணம் என்றே சொல்ல வேண்டும்.* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது. அதனால், கடவுளை நம்பிச் சரணடையுங்கள்.- விவேகானந்தர்