உள்ளூர் செய்திகள்

பொதுநலம் பேணுங்கள்

* பெற்றோரை மகிழ்விக்கும் பிள்ளைகளை கண்டு கடவுள் மகிழ்ச்சி கொள்கிறார். * அன்பினால் செய்யப்படும் செயல்கள், ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும். * இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக நமக்கு பாடம் கற்பிக்கிறது. * அறிவோடு ஒன்றி விடுங்கள். பிழைகளை அகற்ற இதுவே அறிவியலுக்கு ஒத்த முடிவாகும். * தன்னலத்தை ஒழியுங்கள். மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.* பெற்றுக் கொள்பவனை விட, பிறருக்கு கொடுப்பவனே உண்மையில் பேறு பெற்றவன்.-விவேகானந்தர்