முன்னேற்றம் தரும் மூன்று
UPDATED : மார் 20, 2014 | ADDED : மார் 20, 2014
* பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சியிலும் கூட உள்ளத்தில் அளப்பரிய சக்தி உண்டாகி விடும்.* தற்பெருமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். போட்டி, பொறாமை எண்ணம் சிறிதும் இருப்பது கூடாது.* ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வதே வலிமை. உலகிற்கு நன்மை செய்வதே நமது நோக்கம்.* அமைதி, ஆர்வம், ஒழுக்கம் இந்த மூன்று அம்சங்களும் பணியில் இருப்பது அவசியம்.* நம்பிக்கை, நேர்மை, பக்தி இந்த மூன்றும் இருந்து விட்டால் முன்னேற்றம் வந்து கொண்டேயிருக்கும்.- விவேகானந்தர்