நல்லதை மட்டும்...
UPDATED : ஆக 20, 2025 | ADDED : ஆக 20, 2025
பால்கன் பறவை ஒன்று முல்லாவுக்கு கிடைத்தது. இதற்கு முன்பு பார்க்காததால் அவருக்கு அதன் அகன்ற தாடை, வளைந்த அலகு, அதிகமான இறகுகள் ரசிக்கும்படியாக இல்லை.''என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? உன்னையும் புறாவைப் போல அழகுபடுத்துகிறேன்'' என இறகுகளைப் பிய்த்தெடுத்தார். அலகைச் செதுக்கி நேராக்கினார். கத்திரியால் தாடையின் அளவையும் குறைத்தார்.''இப்போது தான் புறா போல அழகாக இருக்கிறாய்'' என்றார்.மனிதர்கள் பலர் இப்படித்தான் செயல்படுகிறார்கள். தான் நினைப்பது போலவே மற்றவர்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களை மாற்ற விரும்புகிறார்கள். பால்கன் பறவையின் அழகை ரசிக்கத் தவறிய முல்லா போல நல்லதை பார்க்கத் தவறுகிறார்கள். பிறரிடமுள்ள நல்லதை மட்டும் பாருங்கள்.