யார் ஏழை
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
ஒருமுறை மக்களிடம், ''ஏழை என்பவர் யார்'' எனக் கேட்டார் நபிகள் நாயகம். அதற்கு அவர்கள், '' திர்ஹம் (வெள்ளி நாணயம்) இல்லாதவர்'' என்றனர். ''மறுமை நாளில் மனிதனிடம் அவனது வாழ்வு பற்றி கேள்விகள் கேட்கப்படும். வாழும் காலத்தில் யாரையாவது அவன் திட்டியிருக்கலாம். பிறர் மீது அவதுாறு பரப்பி இருக்கலாம். பிறருடைய பணம், பொருளுக்கு ஆசைப்பட்டிருக்கலாம். தன் பக்கம் நியாயம் இல்லாமல் வழக்கு தொடுத்திருக்கலாம். ஏன் கொலை கூட செய்திருக்கலாம். இப்படிப்பட்ட தீய செயல்களால் பூமியில் பாவியாக வாழ்ந்தவனே உண்மையான ஏழை'' என்றார். மறந்தும் பிறருக்கு தீமை செய்யாதீர்.