என்ன மதிப்பு
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
ஒரு நாள் துருக்கி மன்னரும், முல்லாவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மன்னர், ''உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள். ஒருவரைப் பார்த்தவுடன் மனதிற்குள் எடை போட்டு, அவரது மதிப்பைக் கூறுவீர்களாமே. எங்கே... என் மதிப்பை கூறுங்கள்'' என்றார். அவரை ஏற இறங்கப் பார்த்த முல்லா, ''உங்களின் உண்மையான மதிப்பு இருபது பொற்காசுகள்'' என்றார். கோபப்பட்ட மன்னர், ''என்னைக் கேவலப்படுத்துகிறீரா'' எனக் கேட்டார். ''மன்னரே! நான் குறிப்பிட்டது உங்களின் இடுப்பில் உள்ள ஆடையின் மதிப்பைத் தான். இந்த உடலால் எத்தனை காலம் வாழ முடியும்? உயிர் போனால் மன்னர் என்னும் மரியாதை இருக்குமா? அழியும் உடம்புக்கு என்ன மதிப்பு இருக்கிறது?'' எனக் கேட்டார். மன்னருக்கு கோபம் அடங்கி அறிவுக்கண் திறந்தது.