புனித நீரூற்று
UPDATED : அக் 17, 2025 | ADDED : அக் 17, 2025
ஸபா, மர்வா என்னும் மலைகள் மெக்காவில் உள்ளன. இதில் ஸபா மலைக்கு அருகில் தன் மனைவி, குழந்தை இஸ்மாயீலை இறைக் கட்டளைக்காக தனியே விட்டுச் சென்றார் நபி இப்ராகிம். தாகம் ஏற்படவே குழந்தை அழத் தொடங்கியது. தாயிடம் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் தவித்தாள். இரண்டு மலைக்கும் இடையே ஏதாவது வணிகர் கூட்டத்தைக் கண்டால் தண்ணீர் கேட்கலாம் என்பதற்காக இங்கும் அங்குமாக ஓடினாள். அப்போது இறையருளால் அற்புத நீரூற்று அங்கு உண்டானது.குழந்தையின் தாகம் தீர்க்க ஓடிய தாயின் அன்பை போற்றும் விதத்தில் ஹஜ் யாத்திரையின் போது ஸபா, மர்வா மலைக்கு இடையே ஏழு முறை யாத்ரீகர்கள் நடந்து செல்வர். இந்த சடங்கை 'ஸயீ' என்பர். இப்போதும் இந்த நீரை மக்கள் புனிதமாக கருதுகின்றனர்.