இப்லீஸ்
UPDATED : அக் 17, 2025 | ADDED : அக் 17, 2025
நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் முன்பு நல்லவனாக வாழ்ந்தான். ஆதம் படைக்கப்பட்ட போது அவனுக்கு மரியாதை செய்யும்படி இறைக்கட்டளை வந்தது. வானவர்கள் மரியாதை செலுத்தினர். ஆனால் இறுமாப்புடன் இருந்த இப்லீஸ் அதை புறக்கணித்ததால் சாபத்திற்கு ஆளானான். அதன் பின், 'இனி மனிதர்களை தவறாக வழி நடத்துவேன்' என சபதம் செய்தான். அப்போது இறைவன், '' உன்னால் நல்லவர்களை நெருங்க முடியாது. ஆசைக்கு அடிமையாக வாழ விரும்புவோரை மட்டுமே கெடுக்க முடியும்' என்றான். இப்லீஸின் சந்ததியினரே 'ஷைத்தான்' என அழைக்கப்படுகின்றனர்.