உள்ளூர் செய்திகள்

நல்லாட்சி தருபவரே...

ஈரான் நாட்டை ஆண்ட மன்னர் ஒருவர், மக்களின் குறை கேட்க அடிக்கடி நகர்வலம் வருவார். ஒருநாள் வரும் போது அனைவரும் வணங்க, ஒருவன் மட்டும் அலட்சியமாக நின்றான். அதைக் கவனித்த வீரன் ஒருவர் மன்னரிடம் புகார் செய்தார். ''ஏன்? எனக்கு வணக்கம் வைக்கவில்லை. என் மீது கோபமா?'' எனக் கேட்டார் மன்னர். அதற்கு அவர், ''இல்லை. மக்களின் குறைகளை சரி செய்வது மன்னரின் கடமை. அதைப் போல எங்களுக்கும் கடமை இருக்கிறது. அவரவர் தொழிலை செய்து நாட்டை உயர்த்துவதே அது. ஆனால் பலர் இங்கே சோம்பேறியாக வாழ்கிறார்கள். அதை தங்களுக்கு தெரியப்படுத்தவே இப்படி அலட்சியமாக நின்றேன். என்னை மன்னியுங்கள். நல்லாட்சி தரும் தங்களை மதிக்காமல் இருப்பேனா'' என வணங்கினார் அவர்.