உள்ளூர் செய்திகள்

தவறை உணர்ந்தவர்

இளைஞர்களான ஹஸன், ஹுைஸனை சந்திக்க பெரியவர் ஒருவர் வந்தார். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது பாங்கொலி கேட்டது. உடனே தொழுகைக்காக பெரியவர் ஒளு செய்ய உட்கார்ந்தார். தப்பும் தவறுமாக செய்து முடித்தார். இதைப் பார்த்த ஹஸனுக்கு குழப்பம் வந்தது. 'வயதில் மூத்தவரான இவரை நான் திருத்தலாமா... அப்படி செய்தாலும் அதை ஏற்பாரா?' என யோசித்தான் ஹஸன். இதை ஹுஸைன் காதில் சொன்னான். ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து வந்து பெரியவருக்கு எதிரே உட்கார்ந்தனர். அவரிடம், ''ஐயா... நாங்கள் சரியான முறையில் ஒளு செய்கிறோமா என பாருங்கள். தவறு இருந்தால் திருத்துங்கள்'' எனச் சொல்லி ஒளு செய்ய ஆரம்பித்தனர். அவர் திருந்தும் விதமாக மெதுவாக செய்தனர். அதைக் கவனித்த பெரியவரும் தவறை உணர்ந்தார்.