நரகவாசிகளின் நிலை
நபிகள் நாயகம் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது, ''நரகவாசிகளின் நிலையை உங்களுக்குச் சொல்லட்டுமா'' எனக் கேட்டார். மக்களும், ''சொல்லுங்கள்'' என்றனர் ஆர்வமுடன். ''நரகவாசிகள் மண்டியிட்டு தவழ்ந்தபடி வெளியே வருவர். அவர்களிடம், 'சொர்க்கத்திற்குள் நுழைந்து கொள்ளுங்கள்' என்பான் இறைவன். அதன்படி அவர்களும் சொர்க்கத்திற்குச் சென்றால் அது நிரம்பியிருப்பது போலத் தோன்றும். நடந்ததை அவனிடம் சொன்னால், மீண்டும் 'சொர்க்கத்தில் நுழையுங்கள்' என்பான். இப்படியாக மீண்டும் மீண்டும் முயற்சித்தும் தோல்வி அடைவர். கடைசியில் இறைவன், 'இந்த உலகத்தைப் போல பத்து மடங்கு இடம் சொர்க்கத்தில் இருக்கிறது' என்பான். இதைக் கேட்ட அவர், 'அரசனாகிய நீயே கேலி செய்கிறாயா' என நரகவாசிகள் கேட்பர்'' எனச் சொல்லி விட்டு கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார் நாயகம். பார்த்தீர்களா... நரகவாசிகளின் நிலை இதுதான்.