உள்ளூர் செய்திகள்

பாவம்... அது

பொதியை சுமந்தபடி கழுதை ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் பின்னே கையில் குச்சியை வைத்தபடி உரிமையாளரும் சென்றார். அவ்வப்போது அதை அடிக்க, வலி தாங்காமல் கத்தியது. இதை கவனித்தபடி சூபிஞானி ஒருவர் வந்தார். உரிமையாளரிடம், ''வாயில்லா ஜீவனை இப்படி அடிக்கலாமா'' எனக் கேட்டார். ''உங்களைப் பார்த்தால் ஞானியைப் போல் உள்ளது. நான் பணம் கொடுத்து இதை வாங்கி இருக்கிறேன். அதனால் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்'' எனக் கோபமாகச் சொன்னார்'' என்றார். ஆதரவற்ற உயிரை காக்க வேண்டியது உன் கடமை. பின்னாளில் அதை உணர்வீர்கள்'' என சொல்லி விட்டு புறப்பட்டார் ஞானி.