நன்றியை மறக்காதே
                              UPDATED : அக் 30, 2025 | ADDED : அக் 30, 2025 
                            
                          
பழங்கள் நிறைய இருந்த கொய்யா மரத்தில் கிளிகள் தங்கியிருந்தன. கோடை காலம் வரவே மொட்டை மரமாக மாறியது. அத்தனை பறவைகளும் பறந்து செல்ல ஒன்று மட்டும் மரத்தை விட்டு போகவில்லை. இரை தேடி விட்டு மாலையில் பட்டுப்போன மரத்திற்கு திரும்பியது. இதை கவனித்து வந்த மைனா ஒன்று, ''ஏன்... இந்த மரத்திலேயே தங்கிட்ட...'' எனக் கேட்டது. அதற்கு, ''பலகாலம் இந்த மரத்திலேயே தங்கி பழங்கள் சாப்பிட்டேன். மழை, வெயிலுக்கு இதன் நிழலில் இளைப்பாறினேன். அதற்கு நன்றிக்கடனாக இப்போதும் வருகிறேன்'' என்றது கிளி. நன்றி மறக்காதவனே நல்லவன்.