ஆனந்தம் விளையாடும் வீடு
UPDATED : ஜூலை 31, 2021 | ADDED : ஜூலை 31, 2021
கணவன், மனைவி, குழந்தைகள், தந்தை, தாய், சகோதர, சகோதரிகள், தாத்தா, பாட்டி என்று உறவுகளின் உன்னதம் குடும்பம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே குடும்பத்தின் ஆணிவேர். இல்லறம் நல்லறமாக திகழ என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். கணவருக்குரிய கடமை* தன் சக்திக்கு ஏற்ப மனைவியை பராமரிக்க வேண்டும். * மனைவிக்கு உணவும், உடையும் அளிப்பதில் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.* மனைவியை ஒருபோதும் அடிக்கக் கூடாது. * எந்த சூழலிலும் மனைவியை மட்டம் தட்டி பேசக்கூடாது. மனைவிக்குரிய கடமை* கணவனின் பேச்சுக்கு மதிப்பு தர வேண்டும். * கல்வி, ஒழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். * கணவரை குறைத்து மதிப்பிடக்கூடாது. இதை பின்பற்றினாலே வீட்டில் ஆனந்தம் விளையாடும்