மோசடி பேர்வழிகளுக்கு எச்சரிக்கை
UPDATED : டிச 15, 2017 | ADDED : டிச 15, 2017
மோசடி செய்பவர்கள் யார், அவர்கள் அடையும் தண்டனை குறித்து நாயகம் சொல்லியுள்ளார்.* மோசடி செய்த ஒருவன் சாபத்திற்குரியவனாவான்.* இறைவன் ஒருவனை அழித்துவிட வேண்டும் என்று நினைத்தால், மோசடிகளின் வாசல்களை அவனுக்கு திறந்து விடுவான்.* ஒருவன் மோசடி செய்து சம்பாதித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, அவனுக்கு இறைவன் திடீரென்று வேதனையைக் கொடுத்து பிடிப்பான்.* எந்தத் தலைவன் மக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ, அவன் சுவர்க்கம் நுழையமாட்டான்.* உமது உற்ற தோழரிடம் பொய்யை, உண்மை என்று கூறுவது மாபெரும் மோசடியாகும்.* நம்பிக்கையுடன் உன்னிடம் ஒருவன் கொடுத்த பொருளை உரியவரிடம் கொடுத்துவிடு.* உன்னிடம் மோசடி செய்பவனிடம் கூட, நீ மோசடி செய்யாதே.