உள்ளூர் செய்திகள்

ஐந்து வேளை தொழுகை

பஜ்ர்- அதிகாலை தொழுகை: சூரியன் உதயமாவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தொழுவது.லுஹர்- மதிய தொழுகை: சூரியன் உச்சியில் இருந்து மேற்கு நோக்கி சற்று சாய்ந்த பிறகு, ஐந்து நிமிடம் கழித்து தொழுவது.அஸர் - பிந்திய மதியம்: சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சாய்ந்ததும் அடிக்கும் வெயிலில் ஒரு பொருளின் நீளம், அதன் நீளத்தை விட ஒன்றரை மடங்காக (நிழல்) தெரியும் போது, (உத்தேசமாக மாலை 4 மணிக்கு) தொழுவது.மஃக்ரிப்- பிந்திய மாலை: சூரியன் மறைந்ததும் சில நிமிடங்களில் தொழுவது (மாலை 6.30 மணியளவில்)இஷா- இரவு: படுப்பதற்கு முன் நிறைவேற்றும் தொழுகை.தினமும் அதிகமதிகம் தொழுது இறைவனின் பேரருளை நாட வேண்டும்.