பொன்மொழி கேட்போமா!
UPDATED : டிச 15, 2015 | ADDED : டிச 15, 2015
நபிகள் நாயகம் நமக்கு வழங்கிய நல்லுரைகளைக் கேட்போமா! * செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடைபெறுகின்றன. இன்னும் மனிதனுக்கு எண்ணியதே கிடைக்கும்.* எவர் தனது எண்ணங்களை மறுமையின் பக்கம் திருப்புகின்றாரோ, அவருடைய கவலைகள் எண்ணங்கள் அனைத்திற்கும் இறைவன் பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றான்.* உங்களின் உள்ளங்களையும், உங்களின் செயல்களையும் பார்த்தே இறைவன் தீர்ப்பளிக்கின்றான்.* பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காக பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள்.பிறரைப் புறம் பேசாதீர்கள். * பிறரிடம் முகம் சுளிக்காதீர்கள். உங்களில் ஒருவருக்கொருவர் உடன்பிறவிகளாக வாழுங்கள்.