அன்பு செலுத்துங்கள்
UPDATED : டிச 19, 2022 | ADDED : டிச 19, 2022
* அதிக நன்மை கிடைக்க எப்போதும் அன்பு செலுத்துங்கள்.* இதயத்தால் நல்லதை சிந்தித்து உணருங்கள்.கண்களால் நல்லதை பாருங்கள். காதுகளால் நல்லதை கேளுங்கள். இவ்வாறு செய்யாதவர்கள் மிருகங்களை போன்றவர்கள்.* பெண்மையை போற்றுங்கள். * குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுங்கள். * பிரச்னைகளை கண்டு துவளாதீர்கள். * பிறருக்கு செய்யும் உதவியால் பிரதிபலன் எதிர்பார்க்க வேண்டாம். * கோபம் மனிதனின் வயதைக் குறைக்கும் ஆயுதம். * தினசரி கடமைகளில் தொழுகை முக்கியமானது.- பொன்மொழிகள்