எனது வாழ்த்து உங்களுக்கே! நாயகத்தின் பொன்மொழி
UPDATED : டிச 29, 2015 | ADDED : டிச 29, 2015
* பெற்றோருக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு எனது வாழ்த்து உண்டாகட்டும். அவருடைய ஆயுளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக.* எனது உம்மத்தவர்களில் (பின்பற்றுவோர்) செல்வந்தர்களை விட, ஐநூறு வருடங்களுக்கு முன்பாக ஏழைகள் சொர்க்கத்தில் நுழைவார்கள்.* பெருமைக்காக எவர் தனது கீழாடையை தரையில் படும்படி அணிந்து செல்கிறாரோ, அவரை கியாம நாளில் அல்லாஹ், கருணையின் பார்வையால் பார்க்கமாட்டான்.* இங்கே (பூமியில்) செயல்மட்டுமே; கேள்வி இல்லை! அங்கே (இறைவனின் முன்பு) கேள்வி உண்டு; செயல் இல்லை!* பாவங்களில் பெரும்பாவம் கூலி வேலையாட்களின் கூலியில் மோசடி செய்வதாகும்.