சாப்பிடும் முன் கவனியுங்க!
உணவு உண்ணும் போது பின்பற்ற வேண்டியவற்றை நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழி வாயிலாகத் தெரிந்து கொள்வோம். * உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றி விடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.* உங்களில் யாராகிலும் தம் இடது கையால் உண்ணுவதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனென்றால் இப்லீஸ்(ஷைத்தான்) தனது இடது கையாலேயே உண்ணுகிறான்.* எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். பிரிந்து விடாதீர்கள். ஒன்று கூடி இருப்பதில் தான் பரகத் இருக்கிறது.* நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டி விடும்.* வீண்செலவும், ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள் குடியுங்கள். முடிந்தவரை தருமமும் செய்யுங்கள்.* ஒட்டகம் குடிப்பது போன்று தண்ணீரை குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறைகள் மூச்சுவிட்டு குடிப்பதுடன், குடிக்கும் போது பிஸ்மி கூறி குடியுங்கள். குடித்த பின் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறுங்கள்.* உலகில் வயிறு நிரம்ப சாப்பிடுபவர்கள் கியாம நாளில் பசியுடையவர்களாக இருப்பார்கள்.