உள்ளூர் செய்திகள்

குற்றங்கள் நீங்க வழி

அண்ணல் நபி (ஸல்) தனது தோழர்களிடம், “எதன் மூலம் அல்லாஹ் குற்றங்குறைகளை அகற்றுவானோ, உயர் பதவிகளை வழங்குவானோ, அப்படியான செய்திகளை அறிவிக்கிறேன்,” என்றார். அவை என்ன தெரியுமா?* சீதோஷ்ணம் மற்றும் சூழ்நிலை சரியில்லா விட்டாலும், விருப்பமே இல்லாவிட்டாலும் கூட ஒளுவை (தொழுகைக்கு முன் உடலை சுத்தப்படுத்துதல்) சரியாகச் செய்வது.* பள்ளிவாசல் அதிக தொலைவில் இருந்தாலும், அதைக் கடந்து வந்து பள்ளிவாசலில் மக்களோடு ஜமாஅத்தாக (சேர்ந்து) தொழுவது.* ஒரு தொழுகைக்குப் பிறகு மற்றொரு தொழுகைக்காகக் காத்திருப்பது, இப்படி செய்பவர்களுக்கு போர்க்காலத்தில் எல்லைப் பகுதியைக் கண்காணிப்பதற்குண்டான கூலி வழங்கப்படும்.