வாழ்நாள் அதிகரிக்க...
UPDATED : செப் 30, 2020 | ADDED : செப் 30, 2020
* பெற்றோருக்கு உதவும் குழந்தைகளின் வாழ்நாளை இறைவன் அதிகப்படுத்துவான்.* பெற்றோரை கோபமூட்டினால் உங்கள் மீது இறைவன் கோபம் கொள்வான். * துாய எண்ணம் இருப்பவருக்கு நன்மை அதிகம் கிடைக்கும். * துாய எண்ணம் இல்லாவிட்டால் பெரிய நன்மையும் அற்பமாகி விடும். * உண்மை வழி நடந்தால் நன்மை கிடைக்கும். நன்மை செர்க்கத்தை அடைய செய்யும். * பொய் சொன்னால் பாவம் சேரும். பாவங்கள் ஒருவனை நரகத்தில் தள்ளி விடும். * கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசையால் உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் தாழ்ந்த நிலை அடைவர். * கருணை இருக்குமிடம் சொர்க்கம். கஞ்சத்தனம் இருக்குமிடம் நரகம்.* கைமாறு செய்யாவிட்டாலும் உதவியவரை பாராட்டுங்கள். - நபிகள் நாயகம்