முதல் நபராக விருப்பமா...
UPDATED : ஜன 04, 2023 | ADDED : ஜன 04, 2023
* மார்க்கத்தை கற்பதிலும், பிறருக்கு கற்றுக்கொடுப்பதிலும் ஆர்வம் காட்டுங்கள். நீங்களே இறைவன் விரும்பும் முதல் நபர். * நயமாகபேசி உங்களை ஏமாற்றுபவரிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். * பெற்றோர்களிடம் அன்பாக பேசுங்கள். * சரியான இலக்கை தேர்வு செய்ய தினமும் ஒரு மணி நேரமாவது மவுனமாய் இருங்கள். * பிறரை பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். காலம் அவர்களுக்கு மிகச்சரியான தண்டனை கொடுக்கும். அதனுடைய ஆழம் அகலத்தை கணக்கிட முடியாது.* ஒருவருடைய எண்ணங்களும் செயல்களும் மட்டுமே அவருடைய மதிப்பை நிர்ணயம் செய்கின்றன. * பணி செய்யும் இடத்தில் வீண் பேச்சு, தேவையற்ற சிந்தனை வேண்டாம். அது உன் எஜமானின் சொத்து. * தினமும் துாங்குவதகு முன்பாக செய்த நற்செயல்களை நினைத்துப்பாருங்கள்.-பொன்மொழிகள்