தெளிவாக எழுதுங்கள்
நீங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ ஏதாவது தகவல் எழுதப் போகிறீர்களா? அதற்குரிய முறை.* எழுதத் துவங்கும் முன் “அளவில்லா கருணையும் இணையில்லா கிருபையும் உடைய இறைவனின் திருப்பெயரால் இதை துவக்குகிறேன்,” என்று எழுதிவிட்டு, விஷயத்தை தொடருங்கள்.* உங்கள் முகவரியை தெளிவாக எழுதுங்கள். ஏனெனில், படிப்பவர் அதற்கு பதில் அனுப்ப வேண்டுமானால், பழைய டைரிகளைப் புரட்டி, முகவரியை தேட வேண்டிய அவசியம் வராது. முகவரி தொலைந்து போயிருந்தால் அவர் சிரமத்திற்கும் ஆளாவார். உறையின் இடப்பக்கத்தில் உங்கள் முகவரியை அழகாக, தெளிவாக, தவறின்றி எழுதுங்கள்.* எழுதும் தேதியை அவசியம் குறிப்பிடுங்கள். 'அஸ்ஸலாமு அலைக்கும்' (வணக்கம்) என்ற பதத்தை முஸ்லிம் நண்பர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் எழுதும் போது, “நேர்வழியைப் பின்பற்றுபவர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டும்,” என்றும் எழுதுங்கள்.* விஷயத்தை சுருக்கமாக, அதே நேரம் படிப்பவருக்கு புரியும்படியாக, மிக எளிய நடையில் எழுதுங்கள். இதனால், படிப்பவருக்கு உங்கள் மீது நல்லெண்ணம் ஏற்படும். பத்திகளாக பிரித்து இடம்விட்டு எழுதுங்கள்.