உள்ளூர் செய்திகள்

தீப்பிழம்பு

ஹஜ்ரத் மாலிக் சொல்வதைக் கேளுங்கள்.மரணத் தருவாயில் இருக்கும் ஒருவரை காணச் சென்றேன். அவருக்கு கலிமா சொல்லிக் கொடுத்த போது அதைக் கூறாமல் பத்து, பதினொன்று என சொல்லிக் கொண்டே இருந்தார். இறைவனின் பெயரை சொல்ல மறுப்பது ஏன்? எனக் கேட்டேன். அதற்கு, ''அவனது பெயரை கூற முயற்சி செய்யும் போதெல்லாம், தீப்பிழம்பு என்னை நோக்கி விரைகிறது. அந்த பயத்தால் நாக்கு குழறுகிறது'' என்றார். அவர் என்ன தொழில் செய்தார் என விசாரித்தேன். அவர் வட்டி தொழில் நடத்தியதோடு நாணயமற்றவராகவும் இருந்தார் என அருகில் இருந்தவர்கள் கூறினர்.