உள்ளூர் செய்திகள்

உன்னை விட...

ஒருவரிடம், ''இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்'' எனக் கேட்டார் ஈஸா நபி. அதற்கு அவர், ''இறை வணக்கத்தில் ஈடுபட்டிருக்கிறேன்'' என்றார். ''அப்படியானால் சாப்பாட்டுக்கும், பணத்தேவைக்கும் யாரை சார்ந்திருக்கிறாய்'' எனக் கேட்டார். ''என் சகோதரன் சம்பாதிக்கிறான். அவன் என் குடும்பத்தையும், என்னையும் பார்த்துக் கொள்கிறான்'' என்றார். ''உன்னை விட சகோதரனே உண்மையான இறைநம்பிக்கையாளன். உனக்குக் கிடைப்பதைவிட அவனுக்கு நற்கூலி அதிகம் கிடைக்கும்'' என்றார்.