உள்ளூர் செய்திகள்

இருவர்

தினமும் இரண்டு வானதுாதர்கள் பூமிக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர்களின் பணி என்ன தெரியுமா?தாராள மனம் கொண்டவர்களுக்காக ஒரு துாதர், 'நன்மையான செயல்களுக்காக ஏராளமாகச் செலவிடுகிறார். இவருக்கு உன் கருணையைக் காட்டு' என சிபாரிசு செய்வார். மற்றொரு துாதர் கஞ்சத்தனம் செய்பவர்களைக் கண்டறிந்து, ' இவர்களுக்கு அழிவைக் கொடு' என வேண்டுவார். தன் தேவைகளை மட்டுமே நிறைவேற்றும் அளவுக்கு மட்டும் பணமுள்ள ஒருவர், அதில் தர்ம வழியில் செலவழிக்காவிட்டால் அது குற்றம் ஆகாது.