உழைக்கும் கைகளே
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
நபிகள்நாயகம் ஒருநாள் மாலையில் தோழர்களுடன் நடந்து சென்றார். அவ்வழியாக சோர்வுடன் வந்த ஒரு உழைப்பாளியைக் கண்டார். அவரது கைளை கண்ணில் ஒற்றிக் கொண்டார். ஆச்சரியப்பட்ட தோழர்கள், ''யார் இவர்? ஏன் இப்படி செய்கிறீர்கள்'' எனக் கேட்டனர். அதற்கு அவர், ''இவரை நன்கு அறிவேன். தன் குடும்பத்தினர் நலமுடன் வாழ வேண்டும் என காலை முதல் மாலை வரை உழைப்பவர் இவர். உழைப்பால் இவரது கைகள் காய்த்து விட்டன. இதுபோல் உழைக்கும் கைகளுக்கு மரியாதை தருவது நம் கடமை'' என சொன்னார்.