உள்ளூர் செய்திகள்

கிரகணத்தன்று...

அபூபக்ரா (ரலி) கூறுகிறார். தோழர்களான நாங்கள் அனைவரும் நாயகத்துடன் இருந்த போது ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்பட்டது. பரபரப்புடன் பள்ளிவாசலுக்கு புறப்பட்டார். அங்கிருந்த மக்கள் அவரின் முன்னிலையில் கூடினர். கிரகணம் விலகும் வரை நாயகம் இரண்டு ரக்அத்கள் தொழுதார். இறுதியாக எங்களைப் பார்த்து, ''சூரியனும் சந்திரனும் சான்றுகள். அவற்றில் கிரகணம் ஏற்பட்டால் அது விலகும் வரை தொழுகையில் ஈடுபடுங்கள்'' என்றார்.