நம்பிக்கை
UPDATED : செப் 27, 2024 | ADDED : செப் 27, 2024
ஒருவரை நம்பி ஒரு பொருளை ஒப்படைக்கிறோம். திரும்பிக் கேட்கும் போது அவர் அதை கொடுக்கவில்லை என்றால் நம் நிலைமை என்னாகும்? மகளின் திருமணத்திற்காக ஒரு நிறுவனத்தில் பணம் சேர்க்கிறார் ஒரு நபர். அந்த நிறுவனம் மோசடி செய்தால் என்னாகும்?இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுபவருக்கு நரக வேதனை காத்திருக்கிறது. ' நம்பிக்கைக்கு உரியவராக எண்ணி உம்மிடம் பிறர் கொடுத்த பொருளை அப்படியே ஒப்படையுங்கள்' என்கிறது குர்ஆன்.