உள்ளூர் செய்திகள்

மறுமை நாளில்...

மறுமை நாளில் இறைவனின் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது மண்ணுலக வாழ்வில் அவன் செய்த நன்மை, தீமையான செயல்கள் குறித்து விசாரிக்கப்படும். நன்மை அதிகம் என்றால் நற்கூலி வழங்கப்படும் அல்லது அவனால் தீமைக்கு ஆளானவர்களுக்கு நன்மையின் பலன் பகிர்ந்தளிக்கப்படும். ஒருவேளை தீமைக்கு ஆளானவர்களுக்கு நன்மையை அளிப்பதில் பாக்கி இருந்தால் அவர்களின் பாவங்கள் குறிப்பிட்ட மனிதனின் கணக்கில் சேர்க்கப்படும். இதன்பின் நரகத்தில் அவன் வீசி எறியப்படுவான்.