திருமணம் கட்டாயம்
UPDATED : அக் 17, 2024 | ADDED : அக் 17, 2024
தோழர்களில் சிலர் திருமணம் செய்ய மாட்டேன் என்றும், இரவு முழுவதும் தொழுவேன் என்றும், நோன்பு நோற்பேன் என்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இந்தச் செய்தி நபிகள் நாயகத்திற்கு தெரிய வந்த போது அவர், ' நான் நோன்பு வைக்கிறேன்; அதை விட்டு விடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன்; உறங்கவும் செய்கிறேன். பெண்ணை திருமணம் முடிக்கிறேன். இவற்றை புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவரவல்லர். கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் திருமணம் என்பது பிறன்மனை நோக்குவதை தடுக்கவும், கற்பு நெறியைக் காக்கவும் துணைசெய்யும்.