உள்ளூர் செய்திகள்

விரயம் செய்யாதீர்

கணவனும், மனைவியும் இணைந்து குடும்பத்தில் வரவு செலவு பார்க்க வேண்டும். ஆடம்பர எண்ணத்தைக் கைவிட்டால் விரயம் ஏற்படாது. சில பெண்கள் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க வேண்டும் என கணவரை நச்சரித்தபடி இருப்பர். இது இருவருக்கும் கருத்து வேறுபாட்டை உண்டாக்கும். குடும்பத்தில் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தும். நியாயமான செலவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும். 'உண்ணுங்கள். பருகுங்கள். ஆனால் விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக விரயம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை'