பத்து சிறப்புகள்
ஹஜ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் எகிப்து நாட்டில் பிறந்தார். இவர் ஹஜ்ரத் ஷீத்தின் (அலை) நான்காவது தலைமுறையில் வந்தவர். ஸுர்யானி பாைஷ பேசக்கூடிய இவர், மூதாதையர்களின் போதனைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறினார். இதனால் இவருக்கு 'இத்ரீஸ்' என்ற பெயர் வந்தது. இறைவன் இவருக்கு பத்து வகையான சிறப்புகளை கொடுத்திருந்தான். 1. நபியாகவும், ரசூலாகவும் இருந்தார். 2. இவர் மீது 30 தெய்வாக்கினை (ஸஹீபே) இறக்கப்பட்டது. 3. நட்சத்திரக் கணக்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். 4. எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தார். 5. ஆடைகளைத் தைத்து உடுத்தும் முறையை ஏற்படுத்தினார். 6. யுத்தத்தில் ஆயுதங்களைப் பழக்கத்தில் கொண்டு வந்தார். 7. இறைபாதையில் முதன் முதலாகப் போராடிக் காட்டினார். 8. இறை ஏகத்துவத்தை மறுப்பவர்களை கைது செய்தார். 9. பருத்தியிலான மோட்டா ரக துணிகளை உடுத்தும் பழக்கத்தை ஆரம்பித்தார். 10. வழி தவறிவிட்ட காபீலுடைய சந்ததியினரை நேர்வழிப்படுத்தினார்.