பலமும் பலவீனமும்
UPDATED : நவ 07, 2024 | ADDED : நவ 07, 2024
நரி ஒன்று முயலை துரத்திச் சென்றது. குறுக்கே ஓடும் ஆறை கவனிக்காமல் அதில் விழுந்தது. நீச்சல் தெரியாத நிலையில் போராடி கரைக்கு வந்தது நரி. அன்று முதல் தண்ணீரை பார்த்தாலே அதற்கு பயம். ஒருநாள் அது ஆற்றின் கரை ஓரமாக துாங்கிக் கொண்டிருந்தது. அப்போது நண்டு ஒன்று அதன் வாலை கொட்டியது. கோபத்தில் நண்டை ஆற்றில் துாக்கி எறிந்து, 'என்னிடம் மோதினால் இதுதான் கதி. பயங்கரமான தண்ணீரில் தள்ளிவிட்டேனே' என சிரித்தது. பதிலுக்கு அது, ''நான் ஆற்றைத் தேடித்தான் அலைந்தேன். தக்க சமயத்தில் உதவி செய்தாயே' என்றது. ஒவ்வொருவருக்கும் ஒரு பலம், ஒரு பலவீனம் உண்டு.