உள்ளூர் செய்திகள்

வார்த்தை ஜாலம்

நபிகள் நாயகம் முக்கிய விஷயங்களை மூன்று முறை சொல்வார். அப்படி அவர் சொன்ன வசனங்களில் ஒன்று. 'சொற்களில் மூழ்கி விடுவோருக்கு கேடு உண்டாகும்' மக்களைக் கவர்வதற்காக பேச்சாளர்கள் அலங்கார வார்த்தைகளை பயன்படுத்துவர். கவர்ச்சியாக பேசுவதில் தவறில்லை. ஆனால் பொய்யான வாக்குறுதிகளை வீசுவது, ஜம்பமாக பேசுதல் குற்றமாகும். தேர்தலின் போது சிலர் தங்களின் வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றுகின்றனர். மக்களும் அதை உண்மை என நம்பி வீண் போகிறார்கள்.