உள்ளூர் செய்திகள்

மனைவிக்கு முன்னுரிமை

மஹ்ர் என்பது திருமணத்தின் ஒரு பகுதி. மனைவிக்காக ஒரு கணவன் அளிக்கும் முன்னுரிமையின் அடையாளம். 'நீங்கள் மஹ்ரைத் தந்துவிட்டு திருமணம் முடிப்பதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை' என்கிறது குர்ஆன். இதையே நபி மூஸாவும் (அலை) கடைப்பிடித்தார். அவர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே திருமணம் செய்தார். இந்த நிகழ்வை குர்ஆன் விவரிக்கிறது. ''என்னுடைய இரண்டு மகள்களில் ஒருத்தியை உமக்குத் திருமணம் செய்து தருகிறேன். ஆனால் எட்டு ஆண்டுக்காலம் எனக்கு பணியாளராக இருக்க வேண்டும். அதை பத்தாண்டாக நிறைவு செய்தால் அது உமது விருப்பம்'' என்றார் மணமகளின் தந்தை. ''இந்த இரு நிபந்தனைகளில் எதை நான் நிறைவேற்றினாலும் அதற்கு அவனே சாட்சி'' என பதிலளித்தார்.