உள்ளூர் செய்திகள்

பொறுமை

கீழ்ப்படிதல், இன்பம், துன்பத்தில் அமைதியாக இருத்தல், தொழுகையில் ஈடுபடுதல் என எல்லாமே பொறுமையின் வெளிப்பாடு. வாழ்நாள் முழுவதும் தினமும் ஐந்து வேளை தொழுகை செய்ய வேண்டும். இதற்கு பொறுமை அவசியம். பொறுமைக்கும், உண்மைக்கும் சமஅளவில் குர்ஆன் முக்கியத்துவம் தருகிறது. யார் நற்செயல்களை செய்து சத்தியம், பொறுமையுடன் வாழ்கிறார்களோ அவர்கள் நஷ்டம், துன்பத்திற்கு ஆளாவதில்லை.