உள்ளூர் செய்திகள்

இறைத்துாதர்கள்

பூமியில் மனிதனைப் படைத்த இறைவன், 'மனித இனம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்' என அலட்சியம் காட்டாமல் நல்வழி காட்டினான். மனிதர்களில் இருந்து சில இறைத்துாதர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களின் மூலம் சட்டங்கள், வழிகாட்டுதல்களை வழங்கினான். * துாதர்கள் மூலம் இறைவன் அளித்த திருச்செய்தி (வஹீ) அறிவிக்கப்படுகிறது. இதை தவிர அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வேறுபாடு கிடையாது. * தன்னை வணங்கும்படி துாதர்கள் வலியுறுத்துவது இல்லை. மாறாக அவனுக்கு அடிபணிந்து வாழும்படி அறிவுறுத்தினர். * காணிக்கை, நேர்ச்சை, தர்மம், கூலியை அவர்கள் விரும்பவில்லை. 'நேர்ச்சைகள் அனைத்தும் அவனுக்கு உரியவை' என வாழ்ந்தனர்.