ஈமான் என்றால்...
UPDATED : ஜன 13, 2025 | ADDED : ஜன 13, 2025
வானவரான ஜிப்ரீல், 'ஈமான் என்றால் என்ன' என நபிகள் நாயகத்திடம் கேட்டார். அதற்கு அவர் கீழ்க்கண்ட விஷயங்களில் நம்பிக்கை வேண்டும் எனக் கூறினார். 1. அனைத்தையும் படைத்தவன் இறைவன். அவனுக்கு அழகிய பெயர்கள், பண்புகள் உண்டு. 2. மலக்குமார்கள் (ஒளியால் படைக்கப்பட்டவர்கள்) அவனின் கட்டளைக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். 3. தவ்றாத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன் ஆகியவை அவனிடம் இருந்து வந்தவை.4. துாதர்களில் முதன்மையானவர் நபி நுாஹ் (அலை), இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்).5. மறுமை நாளில் விசாரணைக்காக மக்கள் எழுப்பப்படுவார்கள். 6. விதியால் ஏற்படும் நன்மை, தீமை இறைவனிடம் இருந்து வந்தது.