உள்ளூர் செய்திகள்

கடமை

தோழர் அப்துல்லாஹ் நோன்பு அதிகம் இருந்ததோடு எப்போதும் இறை வணக்கத்தில் ஈடுபட்டார். இதை கேள்விப்பட்ட நபிகள் நாயகம் அவரிடம், ''பகல் முழுவதும் நோன்பு நோற்றும், இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபடுவதாகவும் கேள்விப்பட்டேன். நோன்பு வையுங்கள். அதே நேரம் நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள். துாங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் மனைவிக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. குடும்பத்தை மறக்காதீர்கள்'' என அறிவுறுத்தினார்.