உள்ளூர் செய்திகள்

கல்வியின் பயன்

மனிதனின் முக்கிய தேவை கல்வி. வெறுமனே பொருள் சேர்க்கும் நோக்கத்தில் பெறும் கல்வியால் பயன் இல்லை. அது இறைவனை உணரச் செய்வதாகவும் இருக்க வேண்டும். இதற்கு என்ன வழி?பணிவைக் கற்றுக் கொள்வது. பணிவு மனிதனுக்கு அவசியம். அப்போதுதான் அவனின் கட்டளைக்கு கீழ்ப்படியும் பக்குவம் வரும். இதைப் பெறுவதற்காக நபிகள் நாயகம் செய்த துஆவைக் கேளுங்கள்.'இறைவா! பயனளிக்காத கல்வி, உனக்கு பணிந்திடாத குணம், நிம்மதியற்ற மனம், உன்னால் ஏற்கப்படாத பிரார்த்தனை இவற்றில் இருந்து என்னை பாதுகாப்பாயாக' என்கிறார்.